விரும்புகின்ற மாற்றத்தின் அடிப்படை அவனது அறிவாக,ஆசையாக,சூழலாக,மூதாதையரா
இந்த அடிப்படை ஆளுக்கு ஆள்,காலத்துக்குக் காலம்,இடத்துக்கு இடம் மாறுவதால் ஆள்,காலம்,இடம் ஆகியவற்றை முழுமையாக அறிந்து எடுக்கப்படுகின்ற மாற்றம் தான் நிரந்தர மாற்றமாக இருக்க முடியும், இருக்க வேண்டும்;.
ஆள்,காலம்,இடம் ஆகியவற்றை முழுமையாக அறிந்த அறிவு நிச்சியமாக மனிதனுக்கில்லை.
மனிதனையும் காலத்தையும் இடத்தையும் படைத்த படைப்பாளனிடம் மட்டுமே இந்த அறிவு இருக்கின்றது.
மனிதன் விரும்பும் மாற்றத்தை இறைவன் தந்த வாழ்வு முறையாக மாற்ற வேண்டும்,
மனிதன் பேசுகின்ற் மாற்றத்தை இறைவன் தந்த வாழ்வு முறையாக மாற்ற வேண்டும்,
என்ற கருத்தை ‘மாற்ற முடியும்’ என்ற blog மூலமாக தமிழ் உலகத்துக்கு அழுத்திச் சொல்ல விரும்புகிறோம்.
தேiயான மாற்றம் என்பது எம்மைப் படைத்தவன் காண்பித்த மாற்றமே தவிர
படைப்புகளான நாம் சொல்லுகின்ற மாற்றம் அல்ல.
படைத்தவன் காண்பித்த முழுமையான வாழ்வை நோக்கி மக்களை நகர்த்துவதும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை நம்மில் ஏற்படுத்துவதுமே இந்த blog ன் நோக்கம்.
ஹாரூன் மூஸாவைப் பற்றி
கலைத்துரையிலும் இஸ்லாமியத் துரையிலும் பட்டம் பெற்றவர். தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவர். 1990 களில் கவித்துறையில் கால் பதித்தவர். குடும்பத்தோடு
ஐரோப்பாவில் வசிப்பவர்.
maatramudiyum@gmail.com